ஈரானில் 70 ஆயிரம் கைதிகள் தற்காலிகமாக விடுதலை

ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சிறைச்சாலைகளில் உள்ள 70 ஆயிரம் கைதிகளை தற்காலிகமாக விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா, தென்கொரியாவுக்கு அடுத்தபடியாக ஈரனின் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஈரானில் இதுவரை 237 பேர் உயிரிழந்துள்ளனர், 7 ஆயிரத்து 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக ஈரான் சிறைச்சாலைகளில் உள்ள 70 ஆயிரம் கைதிகளை தற்காலிகமாக விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வேகமாக பரவும் சூழலில் சிறைச்சாலைக்கும் பரவினால் உயிரிழப்பு அதிகமாகும் என்ற எண்ணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.  மேலும், கைதிகள் விடுதலையாவதால் நாட்டின் பாதுகாப்பை அரசு உன்னிப்பாக கவனித்து வரும் என்றும் அவர் கூறினார். தற்கலிகமாக விடுவிக்கப்படும் கைதிகள் எப்போது சிறைக்கு திரும்ப வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

Exit mobile version