அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், ஆத்திரமடைந்த ஈரான் அமெரிக்கவுடனான பேச்சுவர்த்தையை நிராகரித்தது.

அணு ஆயுதம் தடை ஒப்பந்த சட்டம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது.

இது பற்றி பேசிய ஈரான் நாட்டின் ஐ.நா. தூதர் மஜித் தாகத், ஈரான் மக்கள் மீது அமெரிக்கா தொடர்ந்துள்ள பொருளாதார போரை நிறுத்த வேண்டும் என்றார். மிரட்டும் போக்கு தொடரும் பட்சத்தில் ஆக்க பூர்வமான பேச்சுவார்த்தையை தொடங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பை மேம்படுத்த பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும், இதில் ஐ.நா. தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Exit mobile version