தமிழக அரசின் புதிய நிதித்துறை செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருஷ்ணன் நியமனம்

தமிழக அரசின் புதிய நிதித்துறை செயலாளராக கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நிதித்துறை செயலாளராக பதவி வகித்து வந்த சண்முகம், அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார், இதையடுத்து நிதித்துறை செயலாளர் பதவிக்கு கிருஷ்ணனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கிருஷ்ணன், வீட்டு வசதித்துறை செயலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணன் விரைவில் பதவியேற்கவுள்ளார்.

Exit mobile version