2 நிமிடத்தில் காலியான ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள்

கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கிய 12வது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிவில் மும்பை, சென்னை, டெல்லி, ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றிக்குள் சென்றன.

இதில் முதல் தகுதிப்போட்டியில் மும்பை அணி சென்னை அணியை வீழ்த்தி நேரடியாக ஃபைனலுக்குள் சென்றது. நேற்றைய தினம் நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் டெல்லி அணி ஹைதராபாத் அணியை வெளியேற்றி தகுதிச்சுற்று 2-க்குள் நுழைந்துள்ளது. நாளை நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் டெல்லி அணி சென்னை அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றிப்பெறும் அணி இறுதிப்போட்டியில் மும்பை அணியுடன் மோதும். 

இதற்கிடையில் ஐபிஎல் பைனல் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆன்லைனில் நேற்று தொடங்கியது. வரும் 12ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டிக்கு ரூ.1500,2000,2500, 5000 என நிர்ணயிக்கப்பட்ட அந்த டிக்கெட்டுகள் இரண்டே நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டது. இதனால் ஏராளமான ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளானார்கள். எந்தவித முன்னறிவிப்பின்றி டிக்கெட் விற்பனை தொடங்கியதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version