சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி மே 14-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதற்காக இரவு 10 மணி முதலே பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் ஐபிஎல் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க இரண்டு குழந்தைகளுடன் வந்த பெண்மணி, ஒரு மூதாட்டியிடம் குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளார். ஒன்றரை மணி நேரம் ஆகியும் குழந்தைகளை பெற தாய் வராததால் அந்த மூதாட்டி காவல்துறையின் உதவியை அணுகினார். காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் குழந்தைகளின் தாயை அழைத்தனர். அப்போது குழந்தையின் பாட்டி என கூறி ஒருவர் வந்ததால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. விசாரணைக்கு பின்னர் குழந்தைகளை அவர்களது பாட்டியிடம் ஒப்படைத்த காவல்துறையினர், அந்தக் குடும்பத்தை எச்சரித்து அனுப்பினர்.