முன்கூட்டியே நோயை கணிக்கும் ஸ்மார்ட் வாட்ச்!

பார்கின்சன்:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்  என்ற பழமொழிக்கு ஏற்ப இன்றளவும் அப்படிப்பட்ட வாழ்வியளில் நாம்  இருக்கிறோமா என்பது கேள்விக்குறியாகதான் உள்ளது.  ஏனென்றால் இன்றையா காலக்கட்டங்களில் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இன்னும் சொல்லபோனால் மருந்துகளை விட  நோய்களே அதிகமாக உள்ளது. இதுபோலவே பார்கின்சன் என்ற நோய் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம். இந்த பார்கின்சன் நோயின் அறிகுறி எப்படி இருக்குமானால், சப்ஸ்டாண்டியா நிக்ரா எனப்படும் நமது மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள டோபமைன் உற்பத்தி செய்யும் நியூரான்களை பாதிக்கும் ஒரு நோய் தான் பார்கிசன்.  பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூளை பல ஆண்டுகளாக சேதமடைந்து இருக்கும். ஆரம்ப கட்டங்களில்,  நடுக்கம்,  மெதுவான இயக்கம், நெகிழ்வற்ற தசை இறுக்கம் ஆகியவை பார்கின்சனின் நோயின் அறிகுறிகளாகும்.

ஸ்மார்ட் வாட்ச் செய்யும் அறிவியல்:

இந்த பார்கின்சன் என்னும் நடுக்கவாதா நோய் பற்றிய ஓர் ஆய்வில் இந்த நோய்கான அறிகுறிகளை அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்மார்ட் வாட்ச் மூலம் கண்டறிய முடியும் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாம் அனைவரும் இன்றைய சூழலில் ஸ்மார்ட் வாட்ச்சை அதிகமானோர் பயன்படுத்தி வருகிறோம். இந்த வாட்ச் வைத்து நாம் பாடல்கள் கேட்க இதற்காக மட்டும் என பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஒரு நோயை கண்டறிய முடியும் என்பதுடன் அந்த வாட்ச் இருதால் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே கணிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

 

பிரிட்டனில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டிமென்ஷியா ஆராய்ச்சி நிறுவனம், 103,712 ஸ்மார்ட்வாட்ச் அணிந்தவர்களின் தரவுகளை  கணக்கெடுத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்தது.  பின்னர், 2013 மற்றும் 2016 காலகட்டத்திற்கு இடையில், அவர்களின் ஒரு வார இயக்க வேகத்தைக் கண்காணிப்பதன் மூலம், பார்கின்சனின் வருவதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே கணிக்க முடிந்தது எனவும் மேலும், இந்தத் தரவுகள் நோயின் அறிகுறிகளைக் கணிக்க உதவும் எனவும்  நம்பப்படுகிறது.

பிரிட்டனின் 30 சதவீத மக்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிவதால் பார்கின்சனின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளைக் கண்டறிய இது எளிய வழியாக இருக்கும் என்கிறார் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட சிந்தியா சாண்டோர். இந்த ஆய்வில் பார்கின்சன் நோயின் அறிகுறிகளை ஏழு ஆண்டுகள் முன்கூட்டியே கண்டறியலாம் என்று ஆய்வின் வழியே நாங்கள் செய்து காட்டியுள்ளோம் என்றார். மேலும் இந்த ஆய்வானது பிரிட்டனின் பயோபேங் தரவைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.  இந்த ஆய்வில் பல குறைபாடுகள் உள்ள அதாவது, நரம்பியல் குறைபாடு போன்ற நிலையுடன் ஒப்பிடுகையில் இது மற்ற நோய்களில் இருந்து வேறுபடுவதாகவும்  கெத்ரின் பெல் தெறிவித்தார். இருந்தாலும் பார்கின்சன் நோய் முற்றுவதை தடுக்கவும் நோயின் சிகிச்சை முறைகள் மற்றும் அந்த நோயின் தீவிரத்தை தடுக்கவும் இந்த ஆய்வானது முக்கியத்துவம் பெறுகிறது. என்றார் கெத்ரின் பெல்.

Exit mobile version