இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்! அப்ப இந்த வேலைக்கும் ஆப்பா?

 செயற்கை நுண்ணறிவு:

அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினி தொழில் நுட்பமானது ஆர்டிபிஸியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் பல்வேறு வளர்ச்சிகளை அடந்து வருகிறது. இந்த வளர்ச்சி  வரும் காலங்களில் தேவை என்றாலும் கணினி தொழில் நுட்பத்தை கொண்டே மனிதர்கள்  செய்யும் வேலைகளை  இந்த செயற்கை  நுண்ணறிவை வைத்தே செய்து விடலாம் என்று கூறுகின்றனர்.  இதனால் பல நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. ஆனால் இவற்றின் நன்மைகளை மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் சீனாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியது. இந்த செயற்கை செய்தி வாசிப்பாளரை  சீனாவில் உள்ள சொகு நிறுவனம் உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை ஏற்கனவே இருக்கும் செய்தி வாசிப்பாளர்களை வைத்து அவர்களின் உருவ மொழி, பாவனை, உதடசைவு வைத்து ஆகியவற்றை கொண்டே உருவாக்கப்பட்டு உள்ளது.  குரல் பதிவு செய்து வைத்தால் மட்டும் போதும் என்ற வகையில் உள்ளது. இது போலவே  அமெரிக்கவில் உள்ள பெண் ஒருவர் ஏஐயால் உருவாக்கபட்ட செயற்கை நுண்ணறிவு கொண்ட ஆண் ஒருவரை திருமணம் செய்து ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இந்தியாவின் முதல் ஏஐ செய்திவாசிப்பாளர்!

இதனை தொடர்ந்து ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவானது இந்தியாவிலும் கால்பதிக்க ஆரமித்து விட்டது என்று கூட சொல்லலாம்.  ஏனெனில், ஒடிசாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை உருவக்கியுள்ளது.  இது இந்தியாவின் முதல் பெண் செயற்கை நுண்ணறிவு வாசிப்பாளரை ஒடிஸா தொலைக்காட்சி நிறுவனம் அறிமுகப்படுத்து உள்ளது. இதற்கு  லிசா என்று பெயர் சூட்டிஉள்ளனர்.  இந்த செய்தி வாசிப்பாளர் பல்வேறு மொழிகளில் செய்தி வாசித்து வருகிறார்.  பார்ப்பதற்கு அசல் செய்தியாளரை  போலவே காட்சியளிக்கிறது லிசா.  நாம் எல்லாம் செய்தியாளர்களை பார்த்தால் பொம்மையை போலவே இருக்கிறார்களே என்று நினைத்து இருப்போம். ஆனால் தற்போது உள்ள நிலையில் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளருக்கும், உண்மை செய்தி வாசிப்பளர்களுக்கும் வித்தாயம் தெரியாத வகையில் உள்ளது என்று கூட சொல்லலாம்.  காலங்கள் மாற மாறா தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும் வளர்ந்து கொண்டே தான் வருகிறது.

Exit mobile version