ஐபிஎல் தொடரின் 3 வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் 3 வது லீக் போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய டெல்லி மும்பையின் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை குவித்தது.
கோலின் இங்க்ராம் 47 ரன்களில் ஆட்டமிழந்ததை அடுத்து, அதிரடியாக விளையாடிய ரிஷாப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்து வியக்க வைத்தார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 213 ரன்களை குவித்தது. மும்பை அணி தரப்பில் மெக்லனகன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.