ஓரங்கட்டப்படும் அட்டகாச வீரர்கள் – என்ன நடக்கிறது இந்த ஐ.பி.எல் தொடரில்?

எதிர்பாராத ஆச்சர்யங்களையும், அதிர்ச்சிகளையும் ஒருங்கே தருவது தான் ஐ.பி.எல். அந்தவகையில் இந்தாண்டு உலகின் தலைசிறந்த வீரர்கள் என்று ஏலத்தில் எடுக்கப்பட்டவர்கள் எல்லாம் கேலரியில் வேடிக்கைப் பார்க்க அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள். கிரிக்கெட் ரசிர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்த பட்டியல் குறித்து பார்ப்போம்.

 

நான் அடிச்சா சரவெடி என மிரட்டிய வீரர்கள் எல்லாம், கேலரியில் அமர்ந்து ரசிகர்களை போன்று அணியை உற்சாகப்படுத்தும் கொடுமை எல்லாம் இந்த ஐபிஎல்லில் அரங்கேறியுள்ளது. பெங்களூரு மண்ணின் மைந்தன் போன்று போற்றப்பட்ட கிறிஸ் கெய்ல், எதற்காக பஞ்சாப் அணியில் ஓரங்கப்பட்டப்பட்டு இருக்கிறார் என்பதை விவாதமாகவே நடத்தி வருகின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்…

ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த தொடக்க வீரர் என போற்றப்பட்ட ரஹானேவை, போட்டி போட்டு ஏலத்தில் எடுத்த டெல்லி அணி, அவரை வெளியே உட்கார வைத்துள்ளது. மற்றொரு வீரரான அலெக்ஸ் கேரி எங்கே என்று அணியின் நிர்வாகத்திற்கே தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை. கொல்கத்தா அணியில் விளையாடிய போது பவுலர்களை அலறவிட்ட கிறிஸ் லின் வெளியே.. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பெர்குசனோ மைதானத்திற்கும் வெளியே நிறுத்தப்பட்டுள்ளதாக பேச்சு..

விக்கெட் வேண்டுமா அவரிடம் பந்தை கொடு என தோனி வைத்திருந்த ஆயுதமான இம்ரான் தாஹீர் வெளியே.. ஒருபோட்டியில் தலையை காட்டிய டேவிட் மில்லரும் இப்போது வாட்டர் பாட்டில் தூக்கி வருகிறார். சுழற்பந்து வீச்சில் கலக்கிய முஜிபுர் ரகுமான் பஞ்சாப் அணியால் மூலையில் சுருட்டி வைக்கப்பட்டுள்ளார்.

இப்படி டக்-அவுட்டில் அமர்ந்திருக்கும் வீரர்களை வைத்து ஒரு அணியை கட்டமைத்தாலே, அந்த அணி ஐபிஎல்லை தட்டி செல்லும் என்றே கூறலாம். இந்த தலைசிறந்த வீரர்கள் நடப்பு தொடரில் அந்தந்த அணிக்காக விளையாடுவார்களா, இல்லை பாதி ஐபிஎல்லில் அணி மாறும் முறையை பயன்படுத்தி, இவர்களை வேறு அணியினர் வாங்குவார்களா என்பது விரைவில் தெரியவரும்..

Exit mobile version