2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

8 அணிகள் பங்குபெறும் 13வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வரும் மார்ச் மாதம் முதல் நடைபெறுகிறது. இதற்கான வீரர்களின் ஏலம் அண்மையில் முடிவடைந்தது. இந்நிலையில், 13வது ஐபிஎல் போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதல் போட்டி மார்ச் மாதம் 29ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடரின், முதல் தகுதி போட்டி மே மாதம் 14ம் தேதியும், வெளியேறுதல் போட்டி மே மாதம்15ம் தேதியும் நடைபெறுகிறது. தொடரின் 2வது தகுதி போட்டி மே மாதம் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, இறுதி போட்டி மும்பை வான்கடேவில், மே மாதம் 24 ஆம் தேதி நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version