சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதல்

12வது ஐபிஎல் போட்டி தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், தினேஷ் கார்த்தி தலைமையிலான கொல்கத்தா ஆகிய இரு அணிகளும் 5 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, ஒரு போட்டியில் தோல்வியுடன் சமநிலையில் உள்ளன. இரு அணிகளிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளதால், சேப்பாக்கம் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்சூல் அதிரடிக்கு சென்னை அணி வீரர்கள் பதிலடி கொடுப்பார்களா என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சம பலம் வாய்ந்த இரு அணிகளும் 5வது வெற்றியை பெற கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

Exit mobile version