ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தியது சென்னை

ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷிகர் தவான் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் அம்பதி ராயுடு 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும் மறுபுறம் அதிரடி காட்டிய வாட்சன் 26 பந்துகளில் 44 ரன்களை குவித்தார்.இதனால் சிஎஸ்கே அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சேன் வாட்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சந்தித்த இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version