மைதானத்துக்குள் வந்து அம்பையருடன் வாக்குவாதம்: தோனிக்கு 50 சதவீதம் அபராதம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

கிரிக்கெட் உலகில் மிகவும் கூல் கேப்டன் என்று அழைக்கப்படுவர் மகேந்திர சிங் தோனி. ஆனால் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் நடந்துகொண்ட விதம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் வெற்றிபெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் ஆறாவது வெற்றியை பதிவு செய்தது.

அணியின் நம்பிக்கை நட்சத்திரமாய் நின்று விளையாடிக்கொண்டிருந்த தோனி, பென் ஸ்டோக்ஸ் வீசிய மூன்றாவது பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். பிறகு சாண்ட்னர் பேட்டிங் செய்யும்போது ஸ்டோக்ஸ் நான்காவது பந்தை ஃபுல்டாஸாக வீச அதை அம்பையர் உல்ஹஸ் காந்தே நோ பால் என சிக்னல் கொடுத்துவிட்டார்.

ஆனால் ஃபுல்டாஸாக வீசப்பட்ட பந்தை நோ பால் என லெக் அம்பையர் தான் அறிவிக்க வேண்டும். சாண்ட்னர் க்ரீஸை விட்டு இறங்கி ஆடியதால் அது நோ பால் இல்லை என லெக் அம்பையர் க்ரிஸ் கேஃபனே தெரிவித்தார். அப்போது அது நோபால்தான் என ரவீந்திர ஜடேஜா அம்பையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அவுட்டாகி வெளியே சென்ற தோனியும் கோபமாக உள்ளே வந்து அம்பையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தோனியின் இந்த விதிமீறல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதனையடுத்து ஐபிஎல் நிர்வாகம் தோனி ஒரு போட்டிக்கு வாங்கும் சம்பளத்தில் 50 சதவித தொகைகை அபராதமாக செலுத்த வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறது.

Exit mobile version