ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 பேர் திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். ஒரு மணி நேர விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்.
சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. தற்போது அமலாக்கத்துறையால் ப.சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.