ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டது முதல் அவர் கைதுசெய்யப்பட்டது வரையான நிகழ்வுகளைப் பார்க்கலாம்…
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரிப் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவைச் செவ்வாயன்று டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து டெல்லி ஜோர்பாக்கில் உள்ள அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். வீட்டில் அவர் இல்லாததால் 2 மணி நேரத்தில் சிபிஐ அதிகாரி முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் குறிப்பிட்ட நோட்டீசை ஒட்டிவிட்டுத் திரும்பிச் சென்றனர். இதனிடையே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. சிதம்பரம் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி வைத்தது. இந்நிலையில் காங்கிரஸ் தலைமையகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். பேட்டி கொடுத்துவிட்டுத் தனது வீட்டுக்குச் சென்ற சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சிபிஐயிடம் சிக்கிய ப.சிதம்பரம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
சிபிஐ அதிகாரி முன் விசாரணைக்கு ஆஜராகக் கோரிச் சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது
சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு
வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது சிபிஐ
காங்கிரஸ் தலைமையகத்தில் பேட்டி கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்ற சிதம்பரம் கைது