ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை நடத்த நீதி மன்றம் அனுமதி

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள, இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீட்டைப் பெற, மத்திய நிதியமைச்சத்தின் கீழ் செயல்படும், அன்னிய நேரடி முதலீடு வாரியத்தின் அனுமதியை, சிதம்பரத்தின் மகன் கார்த்திக் பெற்று தந்தார். இதற்காக அவர், கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக , 2017ல், சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜியை சி.பி.ஐ கைது செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தினை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை தீவிரப்படுத்த, சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜியிடம் விசாரிக்க சிறப்பு நீதி மன்றத்தில் சி.பி.ஐ அனுமதி கோரி மனு அளித்தது. இதனை தொடர்ந்து, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள, இந்திராணி முகர்ஜியை விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.

Exit mobile version