தங்கத்தின் மீது முதலீடுகள் செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம்

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பங்குச் சந்தைகள் மீதான முதலீடுகளை குறைத்து, தங்கத்தின் மீது முதலீடுகள் செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிய உச்சத்தை தொட்ட பங்கு சந்தை, தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நம்பகத் தன்மையை இழந்து வருவதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் பங்கு சந்தையை விடுத்து, தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செய்து வருகின்றனர்.

இதனால், இம்மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே காணப்படுகிறது. கடந்த 12-ம் தேதி 35 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை, தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்றும் சற்று அதிகரித்துள்ளது.

அந்த வகையில், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 4 ஆயிரத்து 819 ரூபாய்க்கும், சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து, 38 ஆயிரத்து 552 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 460 ரூபாயாகவும், சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து, 35 ஆயிரத்து 680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனாவின் தாக்கம் குறையும் வரையிலும், தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

Exit mobile version