இந்திய பங்கு சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியது முதல் ஏறுமுகவாகவே உள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

இந்திய பங்கு சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியது முதல் ஏறுமுகவாகவே உள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை திரும்பப் பெறுவதாலும், கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் தொடர்ந்து சில மாதங்களாக இந்திய பங்கு சந்தையில் நிலையில்லாத போக்கு காணப்படுகிறது.

இந்நிலையில் இந்திய பங்கு சந்தை வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்து மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் நேற்று காலை 1029 புள்ளிகள் சரிந்து 33,729 புள்ளிகளாக இருந்தது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 300 புள்ளிகள் வரை சரிந்து 10,153 புள்ளிகளாகவும் இருந்தது.

இது இந்திய மும்பை சந்தையின் இந்த வீழ்ச்சி மூதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் பங்கு சந்தை தொடர்ந்து ஏறு முகமாகவே உள்ளன. மும்பை பங்கு சந்தை 646 புள்ளிகள் அதிகரித்து 34,647 புள்ளிகளாவும் தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 200 புள்ளிகள் அதிகரித்து 10,423 புள்ளிகளாக உள்ளது.

நேற்று பல ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்த முதலீட்டாளர்கள் இன்று சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். அதேபோல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 28 காசுகளாக உயர்ந்து 73 ரூபாய் 84 காசுகளாக உள்ளது. கச்சா எண்ணெயின் விலை குறைந்ததே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பிற்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version