இன்று உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை..

மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் காலை வர்த்தக நிலவரப்படி, 41,742 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 12 , 279 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக், 8,887 புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 573 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC, 5 ஆயிரத்து 972 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.

ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 13,211 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 23,867 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. ஹாங்காங் மற்றும் சீன பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடங்கி உள்ள நிலையில், ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 27,902 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 3,0 22 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

Exit mobile version