சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை தீவிரம்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி, இரண்டாவது நாளாக இன்றும் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சென்றபோது, சிறைப்பிடிக்கப்பட்டனர்.இந்நிலையில் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் ஆஜராகி, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி குணால் கோஷ் நேற்று ஆஜராகி விளக்கமளித்தனர். இதில், குணால் கோஷை இன்று மீண்டும் ஆஜராக சிபிஐ உத்தரவிட்டிருக்கிறது.

Exit mobile version