ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது தேசிய விசாரணை முகமையின் மிகபெரிய வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம், டெல்லி உள்ளிட்ட 16 இடங்களில் தேசிய விசாரணை முகமையை சேர்ந்த அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அரசியல் தலைவர்களை கொல்லும் சதித்திட்டத்துடன் செயல்பட்டு வந்த 10 பயங்கரவாதிகளை கைது செய்ததுடன், அவர்கள் பதுக்கி வைத்திருந்த, ராக்கெட் லாஞ்சர், 12 கைத்துப்பாக்கிகள், 100 அலார கடிகாரங்கள், 100 செல்போன்கள், 135 சிம் கார்டுகள், உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில், தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக, விரைந்து செயல்பட்டு பயங்கரவாதிகளை கைது செய்த தேசிய விசாரணை முகமை அதிகாரிகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இது தேசிய விசாரணை முகமையின் மிகபெரிய வெற்றி என்று பெருமிதத்துடன் கூறினார்.