இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் நேரில் ஆஜராக சிறீசேனாவுக்கு விசாரணை குழு சம்மன்!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராக முன்னாள் அதிபர் சிறீசேனாவுக்கு விசாரணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தில் 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத குழு நடத்திய இந்த தற்கொலைப் படை தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்ளிட்ட 258 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டின் அப்போதைய அதிபர் சிறீசேனா சிறப்பு குழுவை அமைத்தார். இந்நிலையில் அந்தக்குழு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக வரும் 26ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிறீசேனாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Exit mobile version