ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணை தேவை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசினை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்திய பொருளாதாரம் அபாய கட்டத்தில் இருப்பதாக கூறிய அவர், என்ன செய்தாலும் அடுத்த 60 நாட்களில் பொருளாதாரத்தை மாற்ற முடியாது என்று தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசின் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பேசிய அவர், ரஃபேல் ஒப்பந்தம் மூலம் டசால்ட் நிறுவனம் மிகப்பெரிய அளவு ஆதாயம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.