தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தை இல்லத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்று, அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அமெரிக்காவில் பெறப்பட்ட சிகிச்சை குறித்தும், தற்போதைய உடல்நிலை குறித்தும் விசாரித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், விஜயகாந்தின் உடல் நலம் பற்றி விசாரிக்கவே வந்தாகவும், பழையகால நினைவுகளை அவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.