குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் பகிர்ந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபரின் முகநூல் குழுவில் இருந்த 100 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தைகளின் ஆபாச படங்களை போலியான முகநூல் கணக்குகளைக் கொண்டு இணையத்தில் பகிர்ந்த திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட கிறிஸ்டோபரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கிறிஸ்டோபரின் முகநூல் குழுவில் இருந்த 100 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் குழுவில் பெரும்பாலானோர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்றும், அரசியல் பிரமுகர்களில் இருந்து, மருத்துவர்கள், தொழிலதிபர்கள் வரை பலர் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது, பகிர்வு போன்றவற்றில் ஈடுபட்ட பல ஐ.பி.முகவரிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.