7 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மர கட்டுமானத்தால் ஆன கிணறு ஒன்று ஐரோப்பாவில் கண்டறியப்பட்டுள்ளது.
7 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மர கட்டுமான கிணறு செக் குடியரசின் ஆஸ்ட்ரோவ் அருகே, டி 35 மோட்டார் பாதை அமைக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மர கிணற்றினை பற்றி கிழக்கு செக்கோஸ்லோவாக்கியாவில் உள்ள பர்துபிஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொல்பொருள் மர கட்டுமான பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தனர்.
அந்த ஆய்வில் இந்த கிணறு முழுவதும் ஓக் மரத்தால் உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து இதன் தொழில் நுட்பம் மற்றும் வயதினை கண்டறிவதற்கு தொழில் நுட்ப வல்லுநர்கள் டென்ட்ரோக்ரோனோலாஜிக்கல் எனும் முறையை உபயோகப்படுத்தினர்.
அவர்கள் மேற்கொண்ட முயற்சியில், கிணறானது கி.பி. 5256 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும், இந்த கிணறு முழுவதும் விலங்குகளின் எலும்பு, கொம்பு மற்றும் மரத்தினை பயன்படுத்தி வடிவமைத்துள்ளது எனவும் கண்டறியப்பட்டது.
மேலும் 140 செ.மீ உயரமும், 80க்கு 80 செ.மீ சதுர அடித்தளமும் கொண்ட இந்த கிணறு, நீருக்கடியில் பல நூறு ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்தது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
ஆரம்பகால மக்கள் 7000 ஆண்டுகள் முன்னர் மிகவும் திறமைசாலியாக வாழ்ந்தனர் என்பதற்கு இந்த பழமை வாய்ந்த மர கட்டுமான கிணறே சான்று. உலக அளவில் மிக பழமை வாய்ந்த மர கட்டுமான கிணறு என்ற பெருமையையும் இந்த கிணறு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.