ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களுக்கும் சொத்து வரி உள்ளிட்ட எந்த வரியும் வசூலிக்கக் கூடாது என்றும், ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு பத்திரப்பதிவு, மின் இணைப்பு, வரி வசூலித்தல் கூடாது என்றும், வாக்காளர் அடையாள அட்டை, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடாது என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி உரிய அதிகாரிகளுக்கு, சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும், சொத்து வரி உள்ளிட்ட எந்த வரியும் வசூலிக்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி ஆணையை பிறப்பித்தது. இது தொடர்பாக வரும் 13 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version