திருப்பூர் மாவட்டம் பழையகோட்டையில் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற காங்கேயம் மாடுகளுக்கான விற்பனை சந்தையில் நவீன சினைப்பயிற்சி கருவி அறிமுகம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பழையகோட்டையில் நடைபெற்ற காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தையில் பொங்கலை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட காங்கேயம் மாடுகள், காளைகள், மற்றும் கன்றுகுட்டிகள் விற்பனைக்கு குவிந்தது. இதில் முதன்முறையாக மாடுகளுக்கான நவீன சினைப்பயிற்சி கருவியானது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுவாக மாடுகளின் சினைப்பயிற்சிக்கு தனியார் மருத்துவமனையில் ஆயிரத்து 500 ரூபாய் வரை ஆகும் நிலையில், இங்கு 300 ரூபாயில் பரிசோதனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்படதக்கது.