அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு கரும்பச்சை நிறத்தில் கால்சட்டை மற்றும் இளம் பச்சை நிறத்தில் கட்டமிடப்பட்ட மேல்சட்டை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆறாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சந்தன நிறத்தில் கால்சட்டை மற்றும் சந்தன நிறத்தில் கட்டமிட்ட மேல்சட்டை வழங்கப்படுகிறது. மாணவியருக்கு கூடுதலாக சந்தன நிறக் கோட் வழங்கப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் புதிய சீருடைகள் வழங்கப்படுகின்றன.