கொத்தடிமை முறையை ஒழிக்க புதிய குழு அறிமுகம்

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் மனித கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழில் முறையை ஒழிப்பதற்கான தனி குழு துவங்கப்பட்டுள்ளது.

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் மனித கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு குறித்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மனித கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பதற்கான மாவட்ட அளவில் தனி குழு அமைக்கப்பட்டது. மேலும் குழுவில் வழக்கறிஞர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் என பல்வேறு துறையினர் இணைந்து செயல்படும் வகையில் இக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தலைமை நீதிபதி வசந்த லீலா தெரிவித்தார்.

Exit mobile version