பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக புதிய வசதிகள் அறிமுகம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காகச் சென்னை பெருநகரக் காவல்துறை புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உயரிய நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் சென்னை பெருநகரக் காவல்துறை புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், பெண்களுக்கு எதேனும் ஒரு இடங்களிலோ, சூழ்நிலைகளிலோ அல்லது ஏதோ ஒருவராலோ பாதுகாப்பற்ற நிலையினை உணரும்போது

75300 01100 என்ற எண்ணுக்கோ அல்லது Chennai City Police  என்ற ஐடியின் மூலமாகவோ அல்லது www.facebook.com/chennai.police என்ற பேஸ்புக் மெசஞ்சர் ஐடியின் மூலமாகவோ அல்லது dccwc.chennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது துணை ஆணையாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவு, சென்னை பெருநகரக் காவல்துறை, கிரீம்ஸ்ரோடு, ஆயிரம் விளக்கு, சென்னை- 6 என்ற முகவரிக்கோ தகவலளிக்கலாம் எனச் சென்னை பெருநகரக் காவல்துறை அறிவித்துள்ளது. தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான புகார்களை கீழ்கண்ட முறைகளில் தெரிவிக்கலாம்

வாட்ஸப் எண் : 75300 01100

Facebook Messanger ID : Chennai City Police
(www.facebook.com/chennai.police)
E.Mail ID : dccwc.chennai@gmail.com

அஞ்சல் முகவரி :
துணை ஆணையாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்புப்பிரிவு..
சென்னை பெருநகரக் காவல்துறை, கிரீம்ஸ்ரோடு, ஆயிரம் விளக்கு,
சென்னை- 600 006

Exit mobile version