பசுமைப் பட்டாசுகளை மத்திய அரசு அறிமுகம் செய்ததற்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பசுமை பட்டாசுகளை டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இனி வரும் காலங்களில் பசுமை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்வோம் என்று குறிப்பிட்ட அவர்கள் பசுமை பட்டாசுகள் தொடர்பாக தொடர் ஆய்வு நடத்திய சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் நீரி அமைப்பிற்கு நன்றி தெரிவித்தனர்.