திருப்பூரில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் ரசாயனம் இல்லாத இயற்கை முறையில் விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில், திருப்பூர் அடுத்த அலகுமலை பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது, இந்த பணியில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வரும்நிலையில், ரசாயனம் இல்லாத கடலை மாவு, மரவள்ளிகிழங்கு மாவு, வாட்டர் கலர் மூலம் 3 அடி முதல் 12 அடி உயரம் வரை, சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். இந்த சிலைகள் திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் பிரதிஸ்டை செய்யப்பட உள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த சிலைகள் நீர் நிலைகளில் கரைத்தாலும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை தோளில் சுமந்துவரும் பாகுபலி விநாயகர், அன்னம் வாகன விநாயகர் புதிதாக புல்லட் விநாயகர், ரதத்தில் வரும் விநாயகர் என 80க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. இது, அனைவரும் கவர்ந்து வருகிறது.