பெண்களை பாதுகாக்க இரண்டு சக்கர நவீன ரோந்து வாகனம் அறிமுகம்

ஆபத்தை உணரும் போது பெண்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை போக்குவரத்து காவல்துறையில் நவீன ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு சக்கர நவீன ரோந்து வாகனம் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியை மேற்கொள்ளும்.

4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் இந்த நவீன ரோந்து வாகனம் சென்று, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும். இந்த நவீன ரோந்து வாகனத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு நவீன ரோந்து வாகனத்தை அறிமுகப்படுத்தினார்.

 

Exit mobile version