உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக Truecaller உள்ளது. இதில் பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப சில புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றைப் பற்றிய விரிவான தகவல்கள்
உலகெங்கும் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப், ஸ்கைப் போன்ற செயலிகளுக்கு போட்டியாக இருந்து வருகிறது ட்ரூகாலர் செயலி. தற்போது இதனைப் பயன்படுத்தும் ஒருவர், ஒரு அழைப்பில் பேசிக் கொண்டு இருக்கும் போதே இன்னொரு அழைப்பு வந்தால், அந்த அழைப்பு வெய்ட்டிங்கில் வைக்கப்படுகிறது. அத்தோடு ‘நீங்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளீர்கள்’ – என்று அழைக்கும் நபருக்கும் ட்ரூகாலர் செயலியே கூறி விடுகின்றது. ஆனால் இது எதுவும் முதல் அழைப்பில் பேசிக் கொண்டு இருக்கும் நபருகுத் தெரியாது என்பதே இதன் குறைபாடு.
ஆனால் இந்தக் குறைபாடு இப்போது சரி செய்யப்பட்டு உள்ளது. இப்போது ட்ரூ காலர் பயன்படுத்தும் நபர், ஒரு அழைப்பில் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு இரண்டாவது அழைப்பு வந்தால், அது அவருக்குக் குரல் அழைப்பாகக் காட்டப்படும், அதே சமயம் அவர் பேசிக் கொண்டிருக்கும் அழைப்புக்கும் குறுக்கீடு இருக்காது.
பேசிக் கொண்டிருப்பவர் தனக்குத் தேவை என்றால மட்டும், முதல் அழைப்பில் இருந்து இரண்டாவது அழைப்பிற்குப் போகலாம். call waiting வாய்ப்புடன் உள்ள caller Id வாய்ப்பானது வாடிக்கையாளர் இரண்டாவது அழைப்பில் கலந்து கொள்ள வேண்டுமா அல்லது தற்போதைய அழைப்பை தொடரவேண்டுமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது.
சிம்கார்டுகள் மூலம் செயல்படும் குரல் அழைப்புகள், இணையம் மூலம் செயல்படும் வி.ஓ.ஐ.பி. எனப்படும் இணையவழி அழைப்புகள் ஆகிய இரண்டிலும் தடையின்றி செயல்பட இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து ஐபோன் பயனர்களுக்குமான Truecaller Voice-சேவையை வெளியிடுவதன் மூலம் ட்ரூகாலர் நிறுவனம் தனது இணைய வழி அழைப்பு சேவையை விரிவாக்குவதாக அறிவித்துள்ளது.
சமீப காலங்களில் ட்ரூகாலர் நிறுவனம் பல சர்ச்சைகளை எதிர்கொண்ட போதும், குறைபாடுகளைத் தொடர்ந்து சரிசெய்து பல்வேறு புதிய சேவைகளை வழங்கி வருகிறது. ட்ரூகாலர் நிறுவனத்தின் சேவையை உலகளவில் ஒவ்வொரு நாளும் 15 கோடி மக்கள் பயன்படுத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.