தொகுதி மக்களின் குறைகளை தீர்க்க ' நம் எம்.எல்.ஏ செல்போன் செயலி அறிமுகம்

தொகுதி மக்களின் குறைகளை தீர்க்க “நம் எம்.எல்.ஏ” செல்போன் செயலியை, அதிமுக எம்எல்ஏ குணசேகரன் துவக்கி வைத்தார்.

திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள சேம்பர்ஸ் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி மற்றும் செல்போன் செயலி துவக்க விழா நடைபெற்றது.அதில் கலந்துக்கொண்டு நம் எம்.எல்.ஏ செயலியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தொடக்கிவைத்தார். பின்னர்பேசிய அவர், இந்த செயலி மூலம் பொதுமக்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

Exit mobile version