ஒரு நிமிடத்திற்கு, ஒரு ரூபாய்-மெட்ரோவில் புதிய சேவை அறிமுகம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து,வோகோ என்கிற தனியார் நிறுவனம், மின்சார இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் ஆலந்தூர், கிண்டி, வடபழனி மற்றும் அண்ணா நகர் டவர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில், இந்த வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன. இதனை பயன்படுத்த விரும்பும் பயணிகள், தங்களது மொபைல் போனில், வோகோ செயலியை பதிவிறக்கம் செய்து, தங்களது ஓட்டுநர் உரிமத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், பயணிகள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கு கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு, ஒரு ரூபாய் என்ற அளவில் வசூலிக்கப்படும். இந்த திட்டம் வெற்றி பெற்றால், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த சேவை விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது,முதல்கட்டமாக சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 6 ஸ்கூட்டர்கள் இன்றுமுதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது இந்த சேவையை காலை 7 மணி முதல் இரவு 9மணி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Exit mobile version