முகநூலில் புதிய அம்சங்கள் அறிமுகம்

பிரபல சமூக வலைத்தளமான முகநூலில் 4 புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவும் இந்த புதிய அம்சங்களைப்பற்றி விரிவாகப் பார்ப்போம் இந்தத் தொகுப்பில்…

     
உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ள சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் 245 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயனாளர்களாக உள்ளனர்.அதே நேரத்தில்  பேஸ்புக்கை தவறாகப் பயன்படுத்தும் தனிநபர்களும், தரவுகளை அனுமதியின்றி சேகரிக்கும் நிறுவனங்களும் இந்த பயனாளர்களுக்கு அச்சுறுத்தல்களாக உள்ளனர். இதனால், பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அடிக்கடி புதிய அம்சங்களை பேஸ்புக் நிறுவனம் செயல்படுத்தி  வருகின்றது.
 
அவ்வகையில் தற்போது 4 புதிய அம்சங்களை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இவை 2014ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரைவசி சோதனை கருவி (Privacy Checkup tool) – என்ற அம்சத்தின் மேம்பட்ட வடிவங்களாக உள்ளன. இவை ஒவ்வொன்றைக்குறித்தும் விரிவாக  பார்க்கலாம் …
 
உங்கள் பதிவை யார் பார்க்க முடியும்? (Who can see your post?) – என்ற உங்கள் விருப்பத் தேர்வில் உள்ள புதிய அம்சம் மூலம், உங்களது கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண் – போன்ற விவரங்களை யாரெல்லாம் பார்க்கலாம்?
யாரெல்லாம் பார்க்க முடியாது? – என்பதை நீங்களே வரையறுக்கலாம். இதனால் தேவையற்ற நபர்கள் உங்களைத் தொடர்பு கொள்வதைத் தடுக்க முடியும்.
 
உங்கள் கணக்கை பாதுகாப்பது எப்படி? (How to Keep Your Account Secure?) – என்ற புதிய அம்சத்தின்மூலம் கடவுச் சொல்லை இன்னும் வலுவாக்க முடியும், மேலும் வழக்கத்திற்கு மாறான புதிய கணினி அல்லது கைபேசியில் இருந்து உங்கள் கணக்கிற்குள் நுழையும் போது அதற்கான எச்சரிக்கையை பெறவும் முடியும்.
 
எப்படி உங்களை மக்கள் கண்டுபிடிப்பார்கள்? (How People Can Find You?) – என்ற புதிய அம்சத்தின் மூலம், பேஸ்புக்கில் உங்களை எப்படி மக்கள் கண்டுபிடிப்பார்கள் என்பதை அறிந்து, உங்களுக்கு யாரெல்லாம் பிரண்டு ரிக்வெஸ்ட் கொடுக்க முடியும் – என்பதையும் நீங்களே தீர்மானிக்க முடியும்.
 
இவைதவிர டேடா செட்டிங்க்ஸ் (Data Settings) – என்ற அம்சமானது, உங்கள் பேஸ்புக் கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள செயலிகள் மூலம் பகிரப்படும் பதிவுகளை நிர்வகிக்க உதவுவதுடன், பயன்படுத்தப்படாமல் உள்ள செயலிகளை அகற்றவும் பயன்படும்.

Exit mobile version