Dell நிறுவனத்தின் அதிநவீன லேப்டாப் அறிமுகம்

Dell நிறுவனத்தின்  latitude 9000 சீரிஸ் புதிய லேப்டாப் dell latitude 9510 பெயரில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 15 இன்ச் லேப்டாப் 15 மணி நேர பேட்டரி  திறன் கொண்டிருக்கிறது.

dell latitude 9510 மாடலில் 15-இன்ச் Infinity HD  Display கொண்டிருக்கிறது. இது 14 இன்ச் நோட்புக் அளவிலும் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இதில் தொடுதிரை வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்பில் இன்டெல் கோர் ஐ7 Processor வழங்கப்பட்டுள்ளது.

இதில் Intel Vibe 6 மற்றும் 5G மொபைல் பிராட்பேண்ட் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 5G ஆன்டெனாக்கள் முன்புற ஸ்பீக்கர்களில் பொருத்தப்பட்டுள்ளது. இது லேப்டாப் அதிக தடிமனாக இல்லாமல், மெல்லியதாக இருக்க வழிவகை  செய்திருக்கிறது.

சர்வதேச சந்தையில் dell latitude 9510 விற்பனை மார்ச் 26-ம் தேதி துவங்கப்படுகிறது. இதன் விலை 1799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,29,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version