புதிய 20 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
10 ரூபாய் நாணயம் அறிமுகமாகி 10 ஆண்டுகளாகிவிட்டநிலையில், அதன் பயன்பாடு மற்றும் நாணயங்களுக்கான கூடுதல் ஆயுள் பற்றி நிதியமைச்சம் சார்பில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், 20 ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்யும் அறிவிப்பை மத்திய நிதியமைச்சம் வெளியிட்டுள்ளது. அதன்படி, விரைவில் 20 ரூபாய் நாணயத்தின் தயாரிப்பை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் தோற்றம் எடப்படி இருக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்படவில்லை. தாமிரம், துத்தநாகம், நிக்கல் என்ற உலோக கலவையின் விகிதாச்சாரம் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.