மிரட்டும் கனமழை… டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட்

டெல்லியில் அடுத்த 12 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் ராஜ்பத், ராஜபுரி, ரஜோரி கார்டன் உட்பட பல்வேறு பகுதிகளிலும், நேற்றிரவில் இருந்து மழை பெய்தது. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை அடுத்து, டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு, இம்மாத தொடக்கத்தில் டெல்லியில் கனமழை கொட்டியது குறிப்பிடத்தக்கது.

 

நேற்றிரவு முதல் பெய்த வரும் மழையாக் தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி முக்கியமான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. டெல்லியின் முக்கிய சாலைகள் குளம் போல் காட்சியளிப்பதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். ஒருசில இடங்களில் வாகனங்கள் மழைநீரில் மூழ்கி பழுதடைந்து நின்றது. சாலை முழுவதும் மழை நீர் தேங்கியதால் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

Exit mobile version