மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நேர்காணலில், பாதுகாப்பான இடைவெளியின்றி ஏராளமானோர் திரண்டதால், தொற்று பரவும் அபாயம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், தற்காலிக பணியிடங்களுக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நேர்காணலில், பாதுகாப்பான இடைவெளியின்றி ஏராளமானோர் திரண்டதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

நாகர்கோவில் அருகே, ஆசாரிபள்ளம் பகுதியில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்காக, மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 490 தற்காலிக பணி நியமனங்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.

நேர்காணலில் பங்கேற்க, சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.

பாதுகாப்பு இடைவெளியின்றி அவர்கள் குவிந்ததால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதுமாக கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் நிலையில், உரிய ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் செய்யவில்லை என்ற குற்றச்சாடடு எழுந்துள்ளது.

Exit mobile version