மார்ச் 17ல் இடைத்தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல்

சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்ட நிலையில் மீதமுள்ள 17 தொகுதிகளுக்கும் கடந்த 13ம் தேதி விருப்ப மனு பெறப்பட்டது.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு கட்டண ரசீதுடன் காலை ஒன்பதரை மணிக்கு மனு தாக்கல் செய்தவர்கள் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version