மார்ச் 11, 12ம் தேதிகளில் அதிமுக வேட்பாளர் நேர்காணல்

மக்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் 11, 12ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று அதிமுக தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி நீங்கலாக தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்கள், நேர் காணலில் கலந்துகொள்ள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version