நித்தியானந்தாவுக்கு எதிராக இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ்

நித்தியானந்தாவுக்கு எதிராக இன்டர் போல் போலீசார், ப்ளூ கார்னர் நோட்டீஸை அனுப்பியுள்ளனர்.

குஜராத்தில் இருக்கும் நித்தியானந்தா ஆசிரம கிளையில், இரு இளம்பெண்களை சட்டப்புறம்பாக அடைத்து வைத்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து புகார் வந்ததை அடுத்து பெங்களுரு போலீசார் மற்றும் குஜராத் போலீசார் நித்தியானந்தாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. ஈகுவெடார் நாட்டில் உள்ள தீவை விலைக்கு வாங்கி கைலாசா என்று பெயர் வைத்து தனி சாம்ராஜ்யத்தை நித்தியானந்தா நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நித்தியானந்தாவை கைது செய்ய பெங்களுரு போலீசார், இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடினர்.

இதையடுத்து நித்தியானந்தாவுக்கு, இன்டர் போல் சார்பாக, ப்ளூகார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லும் குற்றவாளி குறித்த தகவல்களை, அவர் தங்கியிருக்கும் நாடு, பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ப்ளூகார்னர் நோட்டீஸ் விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version