பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய இணையவாசிகள்

பிப்ரவரி 14-ஆம் தேதி இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளை கூட அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது நடைபெற்ற தற்கொலை படைத்தாக்குதலில் CRPF எனும் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 44 பேர் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் வீர மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் உலக நாடுகளின் தலைவர்களும் இந்தியாவிற்கு தங்களது ஆதரவையும், பாகிஸ்தானுக்கு எதிரான கண்டனத்தையும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்சமயம் கூகுளில் “best toilet paper in the world” என்று தேடினால் அதில் பாகிஸ்தான் நாட்டுக்கொடி வருவது போன்று உருவாக்கியுள்ளனர் இணையவாசிகள். பாகிஸ்தானின் சமீபகால அத்துமீறல்களை கண்டு கடுப்பான யாரோ செய்த இச்செயல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் இணையதளத்தில் “best toilet paper in the world” என்று தேடியிருக்கிறார்கள்.

Exit mobile version