2019ம் ஆண்டு ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது…வாரா வாரம் ஒரு செய்தி வைரல் ஆகிறது. கடந்த வாரங்களில் “10 years challenge” என்ற ஒரு விசயம் உலகமெல்லாம் பலபேரை உசுப்பேற்றி விட்டது.இதோ இந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கான நேரம்.
வழக்கமாக மீம்ஸ்களில் தமிழ் இணையவாசிகளை அடித்துக்கொள்ள முடியாது. சின்ன கேப் கிடைத்தாலும் சிக்ஸர் அடிக்கும் இவர்களுக்கு இந்த வாரம் வரப்பிரசாதம் தான்..யார் இந்த மீமை ஆரம்பித்தார்கள் என தெரியவில்லை.ஆனால் சிரித்துக் கொண்டே இருக்கும் அளவிற்கு இருக்கிறது..இதோ ஒரு சாம்பிள்..
இந்த காட்சி நமக்கு பரீட்சையமானது. அடுத்து என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வடிவத்தில் உருவாக்கப்பட்ட இந்த மீம்களில் ஒரு காட்சியின் போட்டோ வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைக்கப்படுகிறது.அந்த ஸ்டேட்டஸை பார்ப்பது அந்த காட்சியில் வரும் ஹீரோ,ஹீரோயின்,வில்லன்,காமெடியன் (அ) யாரோ ஒருவர்.இப்படியான காட்சி மீம்ஸ் ஆக உருவாக்கப்பட்டுள்ளது.எப்படி நாம் ஒரு நபரை குறித்து ஸ்டேட்டஸ் வைத்து அதனை அந்த நபர் பார்க்கும் போது நம்மை அறியாமல் நமக்குள் மகிழ்ச்சி, சிரிப்பு வருமோ அப்படியான ஒரு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சிரிப்புடன் அந்த மீம்கள் நம்மை மகிழ்விக்கும்.
இந்த மீம்ஸ்கள் பாரபட்சம் பார்க்காமல் சினிமா, அரசியல் என அனைத்து துறை சார்ந்தவர்களையும் கலாய்த்து உருவாக்கப்படுகிறது. கலாச்சாரங்களுக்கு அழிவே கிடையாது.அதிலும் மீம்ஸ் கலாச்சாரத்திற்கு என்றுமே அழிவு கிடையாது என்பதே நிதர்சனமான உண்மை.