காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்து காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வதந்திகள் பரவாமல் தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டது.
காஷ்மீரில் இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வரும் நிலையில், ஜம்முவில் கட்டுப்பாடுகள் வேகமாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜம்மு, சம்பா, கதுவா, உதாம்பூர் ஆகிய இடங்களில் 2-ஜி மொபைல் இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. நிலைமையை ஆய்வு செய்த பின், கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.