சர்வதேச அளவிலான தற்காப்பு கலை போட்டிகள் துவக்கம்

சென்னையில் தொடங்கிய சர்வதேச அளவிலான கராத்தே, கோபுடோ உள்ளிட்ட தற்காப்பு கலை போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் சர்வதேச தற்காப்பு கலை போட்டிகள் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை உலக கராத்தே சம்மேளனத்தின் தலைவரும் ஜப்பான் நாட்டை சேர்ந்த கிரான் மாஸ்டர் ஹான்ஷி கிரிஸ் செஸ், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கராத்தே, கோபுடோ உள்ளிட்ட தற்காப்பு கலைகளை மாணவர்கள் செய்து காட்டி அசத்தினர். மேலும், கராத்தேவில் உள்ள நிஞ்சா உள்ளிட்ட பல்வேறு கலைகளை செய்து காட்டிய மாணவர்கள் பலரது பாராட்டை பெற்றனர். இதில், இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version