ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிப்பு

சர்வதேச யோகா தினத்தன்று, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொண்டாட பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 21 ஆம் தேதி, சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. யோகா தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டாட வேண்டும் என யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக யுஜிசி செயலர் ராஜ்னிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ஜூன் 21 ஆம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளார். யோகா நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version